Skip to main content
வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கும் சட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கும் சட்டம் - அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கூறப்பட்டுள்ள நால்வர்

வாசிப்புநேரம் -
உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் என நால்வர் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

Sino குழுமத்தின் தலைவர் ரோபர்ட் இங் (Robert Ng), குழுமத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரது பிள்ளைகள் திரு டேரல் இங் (Daryl Ng), திருவாட்டி நிக்கி இங் (Nikki Ng), திரு டேவிட் இங் (David Ng) ஆகியோர் அந்த நால்வர்.

அதிகாரிகள் அவ்வாறு அவர்களை வகைப்படுத்த பிறப்பித்த அறிக்கைக்கு எதிராக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அது உறுதிப்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

அந்த நால்வரும் சீனாவின் மக்கள் அரசியல் ஆலோசனை மன்றத்தில் பொறுப்பு வகிப்பதாக CNA அறிகிறது.

ஆனால் அவர்கள் எந்தத் தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்காக அவர்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக அடையாளம் காணப்படவில்லை என்பதை அமைச்சு சுட்டியது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

X